Thursday, 9 February 2012

சிதமபரத்துக்கும் பலான் பெண்களுக்கும் தொடர்பா - சுப்ரமணிய சுவாமி ட்வீட்




சுப்ரமணிய சுவாமி ட்வீட் மூலம் அடுத்த குண்டை போட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் சிதம்பரத்தை தொடர்பு படுத்தி அவருக்கும் பலான  பெண்களுக்கும் தொடர்பு இருப்பதை போன்ற ஒரு ட்வீட்டை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். கர்நாடக சட்டசபையில் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் பலான வீடியோ பார்த்த பரபரப்பு அடங்கும் முன், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக அவர் மாதம் எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி கூறி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

இது குறித்து சாமி இன்று காலை 8.58 மணியளவில் தனது டுவிட்டரில், டுவிட்டியதாவது, ஆபாச படம் பார்த்த விவகாரத்தில் பாஜகவை குறை கூறும் சிபல் போன்ற காங்கிரசார் உஸ்பெகிஸ்தான் பெண்களுக்காக பி.சி. மாதம் எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்பதை கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். (Swamy39: "Those Congis like Sibal who paint BJP with porn should ask how much PC pays per month for Uzbekis").

அரசியல் வட்டாரங்களும், ஊடகங்களும் ப. சிதம்பரத்தை பி.சி. என்று அழைப்பதுண்டு. குற்றச்சாட்டு என்ற பெயரில் சாமி எழுதியுள்ள இந்த ட்வீட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.